Print this page

பயங்கரவாத தாக்குதல் - மட்டக்களப்பு யுவதி உயிரிழப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குறித்த யுவதி இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறித்த யுவதி படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பினை சேர்ந்த குறித்த யுவதி சுமார் 80 நாட்கள் சிசிக்சைப்பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.