web log free
April 05, 2026

ஜனாதிபதி மைத்திரி பிலிப்பைன்ஸ் விஜயம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் செல்லவுள்ளார்.

அந்நாட்டு ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே, அவர் அங்கு செல்லவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ஒருவர், பிலிப்பைன்ஸுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இம்மாதம் 19ஆம் திகதி வரையில் ஜனாதிபதி அங்கு தங்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அந்நாட்டு ஜனாதிபதியையும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து
ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd