Print this page

ரொய்ஸின் விளக்கமறியல் நீடிப்பு

நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் பெர்ணான்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியில் தொடர்ந்து வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் கடந்த 7ஆம் திகதி கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.