Print this page

முஸ்லிம் அமைச்சர்கள் - பிரதமர் கலந்துரையாடல்

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான யோசனை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர்களுடன் இன்று மாலை இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.