Print this page

உயரதிகாரிகளுக்கு பதவியுயர்வு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் ஒன்பது பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

09 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.