Print this page

தொடர்புடைய அனைவரும் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொல, பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று மாத காலத்திற்குள் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் அனைவரையும் பொலிஸார் கைது செய்து விட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.