Print this page

'சந்தேக நபர்கள் தொடர்பான அறிக்கை வேண்டும்'

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை வழங்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எத்தனை பேர், அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட காரணங்களை உள்ளடக்கிய தகவல்களை தமக்கு அனுப்புமாறு, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை இந்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.