Print this page

ஆயுதங்களுடன் ஏறாவூரில் மூவர் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திபட்டி பிரதேசத்தில் வீடொன்றில் டி 56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்கான 16 தோட்டாக்கள் மற்றும் வாள் ஒன்றுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.