Print this page

'இறுதி முடிவு எடுக்கவில்லை'

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகின்ற நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகவும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்க ஏற்கெனவே எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என வாசுதேவ நாணயக்கார கூறியிருந்தார்.