Print this page

‘மர்ம விமானத்தில் மர்ம நபர் வந்தார்”

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சில நாள்களுக்கு முன்னர் வருகைத்தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த விமான எந்த நாட்டிலிருந்து வந்துள்ளது. அதில் வந்திருக்கும் மர்ம நபர் யார்? எதற்காக வந்துள்ளார். உள்ளிட்ட காரணங்களையும் இதுகுறித்த தகவல்களையும் உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டுமென, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பாதுக்க பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற  வைபவமொன்றில் கலந்துகொண்டுஅஉரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விமானம் சில நாள்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்திருந்து மீண்டும் அங்கிருந்து கிளம்பியுள்ளதுடன், அவ்விமானம் எந்த நாட்டுக்குரியது, எதற்காக வருகைத்தந்திருந்தது போன்ற விடயங்கள் தெரியாத நிலையில் அதில் வந்தவர்கள் யார், இங்கு என்ன செய்தார்கள் போன்ற தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டுமென வலியுறுத்தினார்.