Print this page

ரஞ்சித்,சாகல-6ஆம் திகதி சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும், ஆகஸ்ட் 6ஆம் திகதியன்று கூடவுள்ளதாக,  தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

அன்றைய தினம் சட்ட மற்றும் ஒழுங்குகள்  அமைச்சர்களாக பதவி வகித்த சாகல ரத்னநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க உள்ளனர்.

அத்துடன், சட்டம் மற்றும் ஒழுங்குகள் துறை இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்த்தன அன்றையதினம் சாட்சி வழங்கவுள்ளார்.         

Last modified on Saturday, 27 July 2019 08:12