Print this page

இராணுவ முகாமில் சிப்பாய் தற்கொலை

திஸ்ஸமஹாராம - காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மற்றும் ஓர் இராணுவ சிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.