Print this page

புதையல் தேடியவர்கள் கைது

சேருநுவர மஹிந்தபுர திருகோணமடு வனப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் மூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.