Print this page

மீண்டும் ஆஜராகுமாறு அறிவிக்கப்படவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் மீண்டும் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்படவில்லை என, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், அழைப்பு விடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாகுமாறு இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக இராணுவ தளபதிக்கு அறிவிக்கப்படும் என, தெரிவுக்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.