Print this page

மதவாச்சி விபத்தில் மூவர் பலி

அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.