Print this page

நிந்தவூரில் இரட்டை குழந்தைகள் கொலை

சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணி முதல் 8 மணிவரையான காலப்பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் சடலங்கள் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் குழந்தைகளின் தாயான 26 வயதுடைய பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும் கூறியுள்ளனர்.