Print this page

மேலதிக வகுப்புகளுக்கு தடை

இன்று (30) நள்ளிரவு முதல், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு நாளை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல் போன்ற விடயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.