Print this page

சஹ்ரானின் மனைவியின் சகோதரர் கைது


தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரானின் மனைவியின் சகோதரர் ஒருவர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுபொத்த பகுதியில் வைத்து, முஹமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன், நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.