Print this page

இந்திய மீனவர்கள் ஆறு பேர் கைது

இந்திய மீனவர்கள் ஆறு பேர் கடற்படையினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 2,379 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.