Print this page

போதைபொருள் வியாபாரிக்கு மரண தண்டனை

321 கிராம் ஹெரோய்ன் போதைபொருளை வைத்திருந்த மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி, இன்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.