Print this page

வெளிநாட்டு விஜயம் தொடர்பில் தகவல் இல்லை

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்கள் தொடர்பான எவ்வித தகவல்களும் தம்மிடம் இல்லையென, ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற 2015.01.08ஆம் திகதி தொடக்கம் இதுவரை மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் குறித்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நபர் ஒருவரால், கோரப்பட்ட தகவல்களுக்கே ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.