web log free
May 09, 2025

மகாநாயகர்களே! பெரும் தடையாக உள்ளனர் 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு  தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் ஆகும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 1,253 உள்வாரி பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று( 01) நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

வடக்கில் அபிவிருத்தி பணிகள் பின்னோக்கி நகர்ந்தன. வேலை வாய்ப்பு, காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் காலதாமதம் ஆகியுள்ளன. இந்த அரச நியமனங்கள் கூட உங்களுக்கு எபோபோதோ கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதியின் செயற்பாட்டினால் காலதாமதம் ஆகிவிட்டது என்றார்.

 தற்போது உங்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு காரணம் மைத்திரியின் செயற்பாட்டுக்கு எதிராக போராடியாமையினால் தான் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd