Print this page

நிசங்க - பாலித்தவுக்கு பிடியாணை

அவன்காட் மெரின்டைம் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிசங்க சோதிபதி மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை கைதுசெய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று பிறப்பித்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.