Print this page

முன்னாள் புலனாய்வு அதிகாரிக்கு பிணை

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவியின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.