Print this page

இலங்கையில் மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்து வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்கப் பிரஜைகள் தமது பாதுகாப்பு தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாதிகள் சிறு அளவிலான தாக்குதல்களை நடத்தலாமென்றும் , பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறும் தூதரகத்தின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இடங்கள், போக்குவரத்து நிலையங்கள் , சந்தைகள், வணிக வளாகங்கள், அரச அலுவலகங்கள் , ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் , உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுப் பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்காக இருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

Last modified on Sunday, 04 August 2019 01:39