Print this page

தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது

இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். 

இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமான ஜாமியா மிலியா இஸ்லாமியா என்ற அமைப்பின் கிழக்கு இராணுவப் பிரிவின் தலைவரென சொல்லப்படும் ஓட்டமாவடி வாழைச்சேனையை சேர்ந்த மொஹம்மட் நௌஷாட் உமர் மற்றும் அனுராதபுரத்தில் வசிக்கும் ஒலுவில் பல்கலைக்கழக மாணவன் மொஹம்மட் சல்மான் ஆகியோர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.