Print this page

களுத்துறை விபத்தில் 6பேர் பலி-52 பேர் காயம்

களுத்துறை- வஸ்கடுவ பகுதியில் காலி-கொழும்பு பிரதான வீதியில், இன்று காலை 5.15க்கு இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்னர்.

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தனியார் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றுமே ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு உள்ளன. 

சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த 52 பேரல், ஆண்கள் 43 பேரும், பெண்கள் எட்டுப்பேரும்  சிறுவர்களும் சிறுமிகளும் அடங்குகின்றனர் என  பொலிஸார் தெரிவித்தனர்.

Last modified on Sunday, 04 August 2019 02:05