Print this page

ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவமொன்றில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டதில் மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில், குறித்த சிறுவன, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திவரும் பொலிஸார் சம்வத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞனைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.