Print this page

நாட்டின் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த மாதத்தில் நடைபெறவுள்ள பல்வேறு முக்கிய சமய நிகழ்வுகளை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட கல்பிட்டி தலவில் புனித அன்னமாள் ஆலயத்தின் வருடாந்த ஆடி மாதத் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் கண்டி எசல பெரேஹரா மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின வருடாந்த தேர்த திருவிழா என்பன இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டுமொரு தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏதும் கிடையாது என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கத் தூதரகம் தமது நாட்டுக் குடிமக்களுக்கு விடுத்துள்ள இரண்டாம் நிலை எச்சரிக்கை குறித்து, கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னதாக, இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தது.