Print this page

கம்போடியா செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று கம்போடியாவுக்குச் செல்லவுள்ளார்.

அவர் இன்று நொம்பென்னை வந்தடைவார் என, கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு வரும் ஜனாதிபதிக்கு, மன்னரின் அரச மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படும்.

கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுடன் இருதரப்பு பேச்சுக்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார்.

ஜனாதிபதியும் அவரது குழுவினரும் இந்தப் பயணத்தின் போது, அங்கோர் புராதன பூங்காவி்ல் உள்ள பௌத்த ஆலயங்களுக்கும் செல்லவுள்ளனர்.

ஜனாதிபதியை வரவேற்கும் பதாதைகள் நொம்பென்னில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.