Print this page

லக்ஷமன் கதிர்காமர் படுகொலை சந்தேகநபர் கைது

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான நவநீதன் எனும் குறித்த நபர், தெற்கு ஜேர்மனில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர், ஈ.பி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் ஜேர்மனிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், கடந்த 2005 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Wednesday, 11 September 2019 01:33