Print this page

ரொயிஸ் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்


நீர்கொழும்பு நகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் காட்டான பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 8ஆம் திகதி நீர்கொழும்பு நகரத்தில் வைத்து கட்டான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ இன்று(07) மீண்டும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேகநபரான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோவை எதிர்வரும்2 1 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.