Print this page

இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் ; ஐ.தே.க.எம்.பிக்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளரை தெரிவு செய்வதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை நேற்று (09) கையளித்துள்ளனர்.

கட்சியின் 55 உறுப்பினர்களே, இவ்வாறு கடிதத்தை கையளித்துள்ளனர். அக்கடித்தில் கைச்சாத்திட்டவர்களில் பெரும்பாலானோர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவானவர்கள் என அறியமுடிகின்றது.