Print this page

வடக்கில் 1,201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வடக்கில் 1,201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன.

கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 120 ஏக்கர் காணியும் பொது மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன.

அத்துடன், யாழில் 46 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது