Print this page

20 ஆம் திகதி சபை சூடுபிடிக்கும்

எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த சர்ச்சை ஏற்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில், பாராளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்புவதற்கு ஆளும் கட்சி முயற்சிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆகையால், எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போதும்,  எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சை ஏற்படுமென அறியமுடிகிறது.