Print this page

கொச்சினுக்கான விமானசேவை மீண்டும் ஆரம்பம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சினுக்கு இடம்பெறும் விமானசேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை குறித்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன.

கொச்சின் விமான நிலையத்தில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக இந்த விமான சேவைகள் இரத்து ​செய்யப்பட்டன.

தற்போது, அங்கு நிலமை சீராகியதை அடுத்து, இலங்கையில் இருந்து கொச்சினுக்கான விமானம் இன்று காலை புறப்பட்டுச் சென்றது.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல். 166 என்ற விமானமே, காலை 9.10 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொச்சின் நோக்கி பயணமாகியுள்ளது.