Print this page

முதலாவது தேர்தல் எது? 23 முதல் விசாரணை

 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியுமா? என்பது தொடர்பில், உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விளக்கம் கேட்டுள்ளார். 

அதனடிப்படையில், அதுதொடர்பிலான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதிமுதல் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அது தொடர்பிலான விசாரணை ஆரம்பமாகி, ஒருவாரத்துக்குள் அல்லது 10 நாட்களுக்குள் தனது விளக்கத்தை உயர்நீதிமன்றம் அறிவிக்கும். 

உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தின் பின்னரே, தேர்தல்கள் தொடர்பில் தீர்மானிக்கமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் 50 நாள்களும், ஜனாதிபதி தேர்தல் நடத்தவேண்டுமாயின் 60 நாட்களும் போதும், எந்தத் தேர்தல் முதலில் நடத்தப்பட்டாலுமு், ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்விதமான தாமதமும் ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

 

Last modified on Saturday, 07 September 2019 12:41