Print this page

அமெரிக்காவுடனான டீல் யாருக்கு?

அமெரிக்காவுடன் இணக்கப்பாடு காணப்படுவது யாருக்கு என்பது தொடர்பில் தற்போது நடைபெறும் சம்பவங்களை பார்க்கும்போது மக்களால் புரிந்துகொள்ள முடியும் என, அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“டீல்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் கதைத்தாலும் அவ்வாறு கதைப்பவர்கள்தான் இந்த டீல்களை மேற்கொண்டுள்ளார்கள். மொட்டின் வேட்பாளரை அறிவிக்க முன்னரும் அவர்கள் தான் சந்திப்புக்களை மேற்கொண்டனர். நாம் இராஜதந்திர கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம். யார் டீல்களை மேற்கொள்கின்றார்கள் என்பது தொடர்பில் மக்கள் தான் இறுதி முடிவினை எடுக்க வேண்டும். மக்களை ஏமாற்ற இயலாது.” என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு முறையொன்று உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் பெயரிடப்படுவார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.