Print this page

ரணிலுக்கு 7 நாள் காலக்கெடு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

அக்காலப்பகுதிக்கும் உறுதியான தீர்மானமொன்றை எட்டவில்லையாயின் மாற்று நடவடிக்கை எடுக்கவேண்டி வருமென அறிவுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. எனினும், பாராளுமன்றத்தில் நாளை (20) நடைபெறும் விவகாரங்கள் தொடர்பில் மட்டுமே ஆராயப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் களமிறக்கவேண்டிய வேட்பாளர் தொடர்பில் எதுவுமே பேசப்படவில்லை.

 

Last modified on Thursday, 22 August 2019 03:52