Print this page

பாராளுமன்றஉறுப்பினர்கள் சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்றஉறுப்பினர்கள், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தககவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பிரேமதாசவை சந்திப்பதற்கு, கட்சியின் பாராளுமன்ற பின்வரிசை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடலை, ஏழு நாள்களுக்குள் நடத்துமாறு, அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடிதமொன்றைக் நேற்று கையளித்தனர்.

 
Last modified on Tuesday, 20 August 2019 14:22