Print this page

மரண தண்டனை!!!

மரண தண்டனை

மனுக்கள் தள்ளுபடி மரண தண்டனையை இரத்து செய்யகோரி, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களும் உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாசிறி, நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட, இந்த தனிநபர் சட்டமூலமொன்றை, ஓகஸ்ட் (01) சமர்ப்பித்தார்.

அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின், மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு, வாழ்நாள் சிறைத்தண்டனை என திருத்தம் செய்யப்படுமென அந்த சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.