Print this page

சபாநாயகர் கரு பதவி துறப்பார்

கரு ஜயசூரிய, சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

அதற்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிரியும். அதனை எவராலும் தடுக்க முடியாது என்றார்.  அதிலொரு பிரிவினர், தம்முடன் இணைவர் என்றார்.

நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஜனாதிபதி வேட்பாளரைப் பெயர் குறிப்பிட முடியாமையானது, அக்கட்சியின் ஆதரவாளர்களுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Last modified on Thursday, 22 August 2019 03:04