Print this page

எங்கள் நியமனத்தை மாற்றம் மாட்டோம்

 

தலைமை இல்லாமையால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ. 

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்தினால் பழியெடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், புதிய இராணுவத் தளபதி நியமனம் சரியானது என்றார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர், நியமனம் சரியானது என்பதுடன், அந்த நியமனத்தில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது.