Print this page

சஜித் இல்லையேல் கொழும்பை முடக்குவோம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காவிடின், நாடாளவிய ரீதியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து கொழும்பை முடக்குவோம் என, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி, நேற்று (26) அறிவித்தார்.

தங்கல்லையில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 10 நாட்கள் காலக்கெடுவை வழங்கியுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.