Print this page

சஜித்தே களமிறங்குவார்

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவே களமிறக்கப்படுவார் என்று வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாத்தளை - உக்குவளையில் (25) ந​டைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவாகும் ஒருவர், கிராமங்களின் நிலைமைகள் பற்றி அறிந்திருக்க வேண்டியதோடு அரசாங்க அதிகாரிகளுடன் பணியாற்றுவதற்கும் தெரிந்திருக்க வேண்டுமெனவும் சிலர் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு பின்பு அவற்றை மறந்துபோய்விடுவதாகவும் தெரிவித்தார்.