Print this page

மைத்திரியிடம் மண்டியிட்டார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, இரவோடு இரவாகச் சென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து மிக இரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பு தகவல் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குச் சென்றே, கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இதன்போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு ரணில் கேட்டுக்கொண்டுள்ளார் என அந்த தகவல் தெரிவித்தது.

எனினும், ரணிலின் கோரிக்கைக்கு செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரி எவ்விதமான பதிலை வழங்கவில்லை என அறியமுடிகிறது.

இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை 27ஆம் திகதி இரவு சந்தித்தபோது, எடுத்துரைத்துள்ளார் என அறியமுடிகின்றது.

ரணிலின் இந்த காய்நகர்த்தலால் ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியினர் கடுப்பாகியுள்ளனர் என தகவல்கள் கசிந்துள்ளன. 

Last modified on Thursday, 29 August 2019 03:19