Print this page

கில்லாடி ஆசிரியர் சரண்: 11 மாணவர்களை துஷ்பிரயோகம்

ஒரே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் 11 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த, 44 வயதான ஆசிரியர் பதுளை பொலிஸில் சரணடைந்துள்ளார்.

மாணவியொருவர் உட்பட 10 மாணவர்களை அந்த ஆசிரியர், கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

பதுளை, ஹலிஎல பிரதேசத்திலுள்ள பாடசாலையில் 15 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

ஆரம்பத்தில் மாணவி ஒருவர் உட்பட 5 மாணவர்களையே பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியிருந்தார் என முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன எனினும், 

அந்த முறைபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து, கடந்த 28ஆம் திகதியுடன் 11 முறைப்பாடுகளாக உயர்ந்தன.

இந்நிலையில், பதுளை பொலிஸில் 28ஆம் திகதியன்று சரணடைந்த அந்த ஆசிரியரை, பதுளை நீதிமன்றத்தில் இன்று 29 ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Last modified on Saturday, 07 September 2019 12:38