Print this page

ஆதாரங்கள் இல்லை என்கிறார் கோத்தா


சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலைச் செய்தது யாரென, லசந்தவின் மகள் அறிந்துகொள்ளவேண்டுமாயின் தன்னை வந்து சந்திக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் முன்னாளர் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அருண பத்திரிகைக்கு வழங்கிய விசேட செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


படுகொலை தொடர்பில் அறிந்துகொள்ளவேண்டுமாயின் இலங்கைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ, எனினும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் எவையும் இல்லை என்றும் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.