Print this page

சமிக்ஞை கிடைத்தால் பாராளுமன்றம் கலைப்படும்

September 01, 2019

உயர்நீதிமன்றத்தின் விளக்கம்,ஜனாதிபதிக்கு சாதகமாக கிடைத்தால் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கக்கூடுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்.

பாராளுமன்றம் 2020 ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்குப் பின்னர் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என அறியமுடிகின்றது.

அப்படியாயின், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Sunday, 01 September 2019 03:16