Print this page

ஒக்டோபர் 8 வேட்புமனு நவம்பர் 16 வாக்களிப்பு

September 01, 2019

 

தன்னுடைய பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்னதான் விளக்கம் கேட்டிருந்தாலும், அரசியலமைப்பின் பிரகாரம் அவருக்கான பதவிக்காலம், 5 வருடங்களாகும் என்பதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை என, ஜனாதிபதிக்கு சட்டவல்லுனர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர் என அறியமுடிகின்றது.

அதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள், ஒக்டோபர் 8ஆம் திகதியன்று கோரப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்கள் கோரப்பட்டதன் பின்னர்,

நான்கு வாரங்களுக்கும் 8 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் பார்த்தோமாயின், நவம்பர் 16 ஆம் திகதி வாக்களிப்பை நடத்தவேண்டும் என தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019ஆம் ஆண்டுக்கான சாதாரணத் தரப்பரீட்சைகள் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ளமையால், அந்தப் பரீட்சைக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில், ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.

இலங்கை அரசியல் குழப்பமான நிலைமையில் இருப்பதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரையிலும் எதுவும் நடக்கலாம்.

Last modified on Sunday, 01 September 2019 16:26